Health Ministry-Sri Lanka

Super User

Super User

Website URL: http://maadyadigital.com

Integrated vector management

Prevention and control of dengue virus transmission depends entirely on control of the mosquito vectors or interruption of human – vector contact. 

Environmental Management

Environmental management is a key element of IVM. Environmental management can include environmental modification, environmental manipulation, and strategies that reduce contacts between vectors and humans.

In the case of mosquitoes, the larvae are easier to control than adults because they are confined to water bodies. Therefore, removing whatever practicable,  water collection called “source reduction” should be a primary consideration in mosquito control.

Environmental manipulation 

Strategies involve recurrent activities such as measures that have a temporary effect on vector habitat and need to be repeated Eg. Covering of water storage containers or tanks with tight lids, screens or net covers

Removal of water with scrubbing and cleaning of the inner surfaces of water storage containers, refrigerator trays, ant traps, tanks or flower vases to remove mosquito eggs.

 

•    Changing water salinity and PH in ant traps, refrigerator trays etc. By adding salt or soap
•    Puncturing blocked flower pots to produce a drain hole
•    Keeping machinery parts and scrap material of factories in a sheltered place to prevent the collection of rain water. Proper tire management, storing unused tires under a shelter in bus depots and other places

Environmental modifications
 Usually involves capital-intensive investments in permanent infrastructures,

1.    new buildings without roof gutters  
2.    Proper discarded receptacles (burying, crushing, burning)
3.    Mosquito proofing of overhead tanks rainwater harvesting tanks, underground storage tanks, domestic wells
4.    Proper drainage of cement lined or concrete drains
5.    Permanent removal of Roof gutters, and construction of new buildings without roof gutters  
6.    Proper discarded receptacles (burying, crushing, burning)

Permanent removal of Roof gutters, introduced as a policy in the code of practice.

Removal of unnecessary water collecting plants like Bromelia

Reduce Human – vector contacts

A third type of environmental management strategy aims to reduce human–vector contacts through the strategic placement of settlements and housing, or better use of window screening. Originally, such included effective use of mosquito nets, wearing protective clothing      

Enforcement of law against offenders 

Enforcement of law against the offenders who are keeping dengue mosquito breeding places in his/her premises which will endanger the lives of others

 

 

டெங்கு நோயை பரவச் செய்யும் 2 வகையான நுளம்புகளான ஈடிஸ் ஈஜிப்டைஸ் மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் நுளம்புகள் பல்வேறு விதமான கொல்கலன்களுக்குள் முட்டையிடுவதன் காரணமாக தமது இனத்தை பரப்புவதுடன் அவ்வாறு பரவும் அடங்களை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.

  1. அகற்றப்படும் இலகுவில் உக்காத பொருட்கள்
  2. அகற்றப்படும் உக்கும் பொருட்கள்
  3. மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள், தடைப்பட்டுள்ள கூரைப் பீலிகள் மற்றும் கொங்கிரீட் கூரைகள்
  4. மறைக்கப்படாத நீரைச் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் நீர்த்தொட்டிகள்
  5. நீர் ஒன்றுசேரக்கூடிய வீட்டு அலங்கரிப்புக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மற்றும் அலங்கார பாத்திரங்கள்
  6. விசேடமான வீட்டு உபகரணங்கள்: குளிர்சாதனம் மற்றும் குளிரூட்டி தட்டுக்கள்
  7. மிருகங்கள் பருகுவதற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய பாத்திரங்கள், எறும்பு பொறி
  8. செடிகள், செடிகளின் பகுதிகள் மற்றும் மரப் பொந்துகள்
  9. ஏனையவை

1.அகற்றப்படும் இலகுவில் உக்காத பொருட்கள்

 

2.அகற்றப்படும் உக்கும் பொருட்கள்

3. மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள், தடைப்பட்டுள்ள கூரைப் பீலிகள் மற்றும் கொங்கிரீட் கூரைகள்

4. மறைக்கப்படாத நீரைச் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் நீர்த்தொட்டிகள்

5. நீர் ஒன்றுசேரக்கூடிய வீட்டு அலங்கரிப்புக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மற்றும் அலங்கார பாத்திரங்கள்

6. விசேடமான வீட்டு உபகரணங்கள்: குளிர்சாதனம் மற்றும் குளிரூட்டி தட்டுக்கள்

7. மிருகங்கள் பருகுவதற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய பாத்திரங்கள், எறும்பு பொறி  

8. செடிகள், செடிகளின் பகுதிகள் மற்றும் மரப் பொந்துகள்

9. ஏனையவை

காய்ச்சல் காணப்படின்...

1.நோயாளிக்கு ஓய்வு வழங்கவும்

  • கஷ்டப்படவோ பாரமான வேலைகள் செய்யவோ இடமளிக்க வேண்டாம்

2.திரவ வகைகளை பருக கொடுக்கவும்

  • பால், பழச்சாறு, தோடம்பழச்சாறு, ஜீவனீ, தெம்பிலி, சூப் போன்றன பொருத்தமானதாகும்.
  • நீரை மட்டும் அருந்தச் செய்ய வேண்டாம்
  • சிவப்பு அல்லது கபில நிற பாண வகைகளைக் குடிக்கச் செய்ய வேண்டாம். உதா – சிவப்பு நிற குளிர்பாணம், கோப்பி
  • வழக்கமான திண்ம உணவுகளை உட்கொள்ள முடியுமாயின் அவற்றை வழங்கவும்.

3.நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை பற்றி கவனத்திற் கொள்ளவும்.

  • நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை குறைவாயிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.

4.காய்ச்சல் காணப்படின்

  • சாதாரண நீரினால் மேணியை நனைக்கவும்
  • பெரசிட்டமோல் (Paracetamol) உரிய அளவு 6 மணித்தியாலத்திற்கொரு முறை வழங்கவும்.(பிள்ளைகளுக்காக உரிய அளவினை எடைக்கு ஏற்ப வழங்கவும்/ வயது வந்தோருக்கு 1 கிராம்)
  • காய்ச்சலுக்காக வழங்கப்படும் ஏனைய மருந்து வகைகளை (விசேடமாக கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்துகள்) வழங்க வேண்டாம்.

உதா-: Diclofinac/ Ibuprofen/Mefenamic Acid – Tablets / Syrups

5.காய்ச்சல் 2 நாட்களுக்க மேலாக காணப்படின்

  • 3 ஆவது தினத்தில் குருதிப் பரிசோதனையொன்றை மேற்கொள்ளவும்.

6.பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்

இலங்கையில் தற்போது 140 வகையான நுளம்பு இனங்கள் காணப்படுவதுடன் ஈடிஸ் ஈஜிப்டை மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் ஆகிய இரண்டு நுளம்பு வகைகள் மாத்திரம் டெங்கு நோய் வைரஸை பரப்புவதில் பங்களிப்புச் செய்கிறது. இவ் இரண்டு நுளம்பு வகைகளை அவற்றின் உடம்பில் காணப்படும் அடையாளம் காரணமாக இலகுவில் இனங் காணலாம்.

Aedes aegypti Aedes albopictus

Life Cycle

ஈடிஸ் நுளம்புகளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நீரியல் சந்தர்ப்பம் (முட்டை, குடம்பி, கூட்டுப்புழு) மற்றும் தரைச் சந்தர்ப்பம் (நிறைவுடலி) என்பன காணப்படுவதுடன் பெண் நுளம்புகள் நீருடன் கூடிய கொல்கலன்களில் நீர் மட்டத்திற்கு சற்று மேலே ஈரலிப்பான மேற்பட்டையில் முட்டையினை (படம் 1) ஒட்டுவதுடன் அம் முட்டை நீருடன் மோதுகின்ற போது (மழை அல்லது வேறு ஒரு முறையினால் நீர் ஒன்றுசேர்தல் மூலம்) முட்டைகள் வெடித்து குடம்பி சந்தர்ப்பமாக (படம் 2) மாறும். இந் நுளம்பு குடம்பிகள் நீரிலுள்ள கூட்டுப்பொருள் மற்றும் சிறிய நுண் அங்கிகள் என்பவற்றை உணவாக உட்கொண்டு 1ஆம் குடம்பி சந்தர்ப்பம் முதல் 4ஆம் குடம்பி சந்தர்ப்பம் வரை வருகின்றன. குடம்பியானது தேவையான உடல் பருமனை அடைந்ததன் பின்னர் மற்றும் தேவையான சக்தினைப் பெற்றுக்கொண்ட பின்னர் 4ஆம் குடம்பி சந்தர்ப்பத்திலிருந்து கூட்டுப்புழு (படம் 3) சந்தர்ப்பத்திற்கு மாற்றமடைகிறது. இவ் வழ்க்கைச் சக்கரத்தினைப் பூரணப்படுத்துவதற்காக 8-10 தினங்கள் செலவழிப்பதுடன் இது குடம்பி தனது உணவு உட்கொள்ளும் அளவு மீது தங்கியுள்ளது.
ஈடிஸ் நுளம்பின் முட்டைகளுக்கு பாதகமான சூழல் மற்றும் காலநிலை நிலைமைகளினைப் பொறுத்துக்கொண்டு பல மாதங்கள் சாகாமல் வாழ்வதற்குரிய விசேட ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் இதன் காரணமாக நுளம்பின் குடம்பி சந்தர்ப்பம், கூட்டுப்புழு சந்தர்ப்பம் மற்றும் நிறைவுடலி சந்தர்ப்பங்கள் அழிக்கப்பட்டாலும் நுளம்பின் முட்டைகள் தேங்கியுள்ள கொல்கலனொன்றில் நீர் விழுந்ததும் முட்டை வெடித்து மீண்டும் நுளம்புகள் பெருகக் கூடிய ஆற்றல் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக கொல்கலன்களில் ஒட்டியுள்ள முட்டைகளை அழிப்பதற்கான விசேடமான ஒரு முறைமை காணப்படவில்லை. நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்தில் காணப்படும் இவ்வாறான இயல்புகளின் மாற்றங்களின் காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டெங்கு நுளம்புகளை இல்லாதொழித்தலானது இலகுவான காரியமல்ல.

 

காவி நோய்களுள் இலங்கையில் டெங்கு நோய் முக்கிய இடத்தினை வகிப்பதுடன் முதல் தடவையாக ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் டெங்கு நோயென உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி 1962ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டார். டெங்கு கொள்ளை நோய் நிலைமை1965 – 1966 ஆம் ஆண்டுகளில் பதிவாகியதுடன் டெங்கு குருதிப்பெருக்கு நோயாளர்கள் சிலர் அங்கு காணப்பட்டனர். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 1970 மற்றும் 1980 ஆம் தசாப்தங்களில் டெங்கு நோய் பரவுதல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளை நோய் நிலைமைகள் ஒரு சில காலகட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இக் காலகட்டத்தில் தீவிர டெங்கு நோய் நிலைமைகளான டெங்கு குருதிப்பெருக்கு டெங்கு அதிர்ச்சி நிலைமைகள் மிக அபூர்வமாகவே நிகழ்ந்துள்ளன.  
மேலும் 1980 -1985 ஆம் ஆண்டுகளில் வைரஸ் நோய் நிலைமைகளுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட நோயாளர்களுள் 14% - 24% மான எண்ணிக்கையான நோயாளர்களது நோய் நிலைமைகள் டெங்கு வைரஸ் தொற்றியமையினால் ஏற்பட்டுள்ளதாகவும் 4 வகையான வைரஸ்கள் இக் கால கட்டத்தில் இலங்கையில் பரவிச் சென்றதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே டெங்கு 2 மற்றும் டெங்கு 3 என்ற வகையான வைரஸ்கள் பெருமளவிலான நோயாளர்களிடம் காணப்பட்டதாக இனங்காணப்பட்டுள்ளன.
முதற்றடவையாக டெங்கு வைரஸ் வகை 3 காரணமாக டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலைமையுடன் கூடிய ஒரு கொள்ளை நோய் நிலை 1989- 1990 இல் பதிவாகியது. டெங்கு வைரஸ் வகை 3 இலங்கையில் பரவி பல வருடங்களின் பின்னர் இவ்வாரான ஒரு நிலைமை டெங்கு வைரஸ் வகை 3 இடம்பெற்ற உயிர்மத்தின் மாற்றம் காரணமாக ஏற்பட்டதென ஊகிக்கப்படுகிறது. அதிலிருந்து குறிப்பிட்ட கால எல்லைகளில் படிப்படியாக நோயளர்களின் எண்ணிக்கையில் ஓர் அதிகரிப்பு மற்றும் மிகத் தீவிரமான டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் அதிர்ச்சி நிலைமையுடனான கொள்ளை நோய் நிலைமைகள் இலங்கையில் பதிவாகின.

இந் நிலைமைகளின் கீழ் 1996 ஆம் ஆண்டு டெங்கு நோயானது கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டிய நோய்ப் பட்டியலின் கீழ் உள்ளடக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டிலிருந்து பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு

ஆண்டு நோயாளர் எண்ணிக்கை
2002   8 931
2003   4 672
2004 15 463
2005   5 994
2006 11 980
2007   7 332
2008   6 607
2009 35 095
2010 34 105
2011 28 140
2012 44 456
2013 32 063
2014 47 502
2015 29 777
2016 55 150

Trend and Case fatality ratio Upto 2012

Temporal Spread   

 

Seasonality upto 2012

 

 Incidence   

2013

 

2012

 

2011

 

 

எங்களை தொடர்பு

  • தேசிய டெங்கு தடுப்பு பிரிவு,
    பொதுமக்கள் சுகாதார கட்டடத்தொகுதி,
    555/5, எல்விட்டிகல மாவத்தை, நாராஹேன்பிட்டி, கொழும்பு 5
  • (0094) 1 2368416, 2368417

டெங்கு நோய்

டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக...

Read more