Health Ministry-Sri Lanka

Super User

Super User

Website URL: http://maadyadigital.com

தேசிய டெங்கு தடுப்பு பிரிவானது சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பாக கருமமாற்றும் ஒரு தேசிய நிறுவகமாகும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட டெங்கு கொள்ளை நோய் நிலைமையினைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய 2005 ஆம் ஆண்டில் இது தாபிக்கப்பட்டது. தேசிய டெங்கு தடுப்பு பிரிவு பிரதானமாக ஏனைய தேசிய ரீதியான தரப்பினர்களுடன் கூட்டிணைந்து டெங்கு நொயை ஒழிப்பதற்கு / தடுப்பதற்கு பங்களிப்புச் செய்து வருகிறது.

எமது தொலைநோக்கு

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதனூடாக அந் நோய் பரவுவதால் ஏற்படக்கூடிய சமூக சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறைத்தல்.

எமது பணி

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் மிகப் பொருத்தமான திட்டங்களைத் தயாரிப்பதற்காகவும் கொள்ளை நோய் நிலைமைகளை ஏற்கனவே இனங்கண்டு துரிதமாக செயற்பட்டு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அவசியமான ஆற்றலை விருத்தி செய்தல்.

குறிக்கோள்கள்

டெங்கு நோய் மேலும் பிரதான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவாகாத விதத்தில் நோய் பரவுவதைக் குறைத்தல்.

பிரதான நோக்கம்

2015 ஆண்டளவில் 2009 ஆம் ஆண்டு பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையினையும் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையினையும் 50 சதவீதத்தினால் குறைத்தல்.

விசேட நோக்கங்கள்

•  டெங்கு நோய் பரவுவதைத் துரிதமாக இனங்கண்டு அந் நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்புடைய சுகாதாரப் பிரிவுகளில் கடமை புரியும் அலுவலர்களை சக்தி பெறச் செய்தலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குதலும்.


•  செயற்திறனுடைய ஒன்றிணைந்த நோய்க்காவிக் கட்டுப்பாட்டினை மேற்கொண்டு அதனைப் பேணிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளல்.


•  டெங்கு நோயாளர்களைத் துரிதமாக இனங்கண்டு அவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குவதற்கு மருத்துவ பணிக்குழாத்திடம் காணப்படும் ஆற்றலை விருத்தி செய்தல், அதற்குத் தேவையான வைத்தியசாலை வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் டெங்கு நோய் தொற்றிய சந்தர்ப்பங்களில் துரிதமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மக்களை ஊக்கப்படுத்தல்.


•  வெற்றிகரமான டெங்கு ஒழிப்புச் செயன்முறையொன்றைப் பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் பேணிச் செல்வதற்காக தேசிய ரீதியில் ஏற்புடைய தரப்பினர்களுடன் கூட்டிணைப்பினை மேற்கொள்ளல்.


• டெங்கு கொள்ளை நோய் நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் அதனை ஊகித்தல், துரிதமாக இனங்கண்டு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தல்.

எதிர்பார்க்கப்படும் பிரதிபலன்கள்

•  நோய்க் கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுவடைதல்.


•  நோய்க்காவி நுளம்புகளைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் என்பன வலுவடைதல்  
•  ஆய்வுகூட வசதிகள் வலுவடைதல்.


•  டெங்கு நோய்க்கு சிகிச்சையளிக்கும் செயன்முறை வலுவடைதல்.


•  டெங்கு நோயைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் பேணிச்செல்வதற்காக மக்கள் செயற்படல்.


•   டெங்கு கொள்ளை நோய் நிலைமைகளைத் துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஆற்றல் விருத்தியடைதல்.

எங்களை தொடர்பு

  • தேசிய டெங்கு தடுப்பு பிரிவு,
    பொதுமக்கள் சுகாதார கட்டடத்தொகுதி,
    555/5, எல்விட்டிகல மாவத்தை, நாராஹேன்பிட்டி, கொழும்பு 5
  • (0094) 1 2368416, 2368417

டெங்கு நோய்

டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக...

Read more