Health Ministry-Sri Lanka

Activities & Services tamil

Activities & Services tamil (5)

29
ஏப்2014

கொள்ளை நோய் நிலைமைகளை கட்டுப்படுத்தும் போது அவசரமாக நோய்த்தொற்று நுளம்புகளைக் கட்டுப்படுத்தலும் நோயாளர்களிக்கு உரிய கவனிப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலும் மிக முக்கியமான பணிகளாக காணப்படுகின்றன.

கொள்ளை நோய் நிலைமைகளின் போது பின்வருமாறு செயற்படல் வேண்டும்

  • நோய் சிகிச்கைப் பிரிவுகளுக்கு டெங்கு நோயாளர்களென சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் ஆகக் கூடுதலாக சமூகமளிப்பதனை இனங் காணல்
  • மாவட்ட, சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுமற்றும் சிறு பிரதேச மட்டத்தில் நோயாளர் மற்றும் காவி பற்றிய தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்.
  • தரவுகளினடிப்படையில் கொள்ளை நோய் நிலைமைகளை ஊகித்தல்
  • குடம்பி நிபுணத்துவத் தரவுகளை உரியவாறு பகுப்பாய்வு செய்து காவி அடர்த்தி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களை இனங் கண்டு நோயாளர்கள் வரும் வரை காத்திருக்காமல் தேவையான காவி ஒழிப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்தல்
  • குடம்பி நிபுணத்துவத் தரவுகள் மற்றும் நோயாளர்களது தரவுகள் என்பவற்றுக்கு ஏற்ப அபாயமான பிரதேசங்களை ஊகித்தலும் முன்னரே இனங்காணலும்
  • காவி ஒழிப்புக்கான திட்டங்களை ஆயத்தப்படுத்தல், இலக்குகளைத் தெரிவு செய்தல், செயற்பாடுகளைத் திட்டமிடலும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குதலும்
  • செயற்பாடுகளை மேற்பார்வை செய்தலும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தலும்
29
ஏப்2014

டெங்கு ஒழிப்பு மற்றும் தடுத்தல் என்பவற்றைத் தடையின்றி பேணிச் செல்வதற்காக மக்களை முனைப்படையச் செய்யும் செயன்முறைகளை வலுவடையச் செய்தல்

  • நுளம்பு ஒழிப்பு வாரங்களை பிரசித்தப்படுத்தல், ஊடக கூட்டங்களை நடாத்துதல் மற்றும் நுளம்பு ஒழிப்பு வாரத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் வசதி செய்து கொடுத்தல்.
  • சுகாதாரக் கல்விக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தல்.
  • இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நுளம்புகள் பரவும் இடங்கள் பற்றியும் அவற்றை அகற்றுதல் பற்றியும் மக்களுக்கு அறிவூட்டுதல்.


தொடர்பாடல் மூலம் நடத்தை சார்ந்த மாற்றமொன்றை ஏற்படுத்துதல் 

டெங்கு ஒழிப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அவசரமாக டெங்கு நோயாளர்களை இனங்கண்டு தேவையான சிகிச்சைகளை வழங்குதலும் வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்ளை இல்லாதொழித்தல், அகற்றுதல் மற்றும் நுளம்புக் கடியிலிருந்து விலகியிருத்தல் என்பன முக்கியம் பெறுகின்றன.


உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒரு முறைமையான தொடர்பாடலினூடாக நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துதல் இச் சவாலினை விட்டு விலகி தனி நபரிடமும் மக்களிடமும் குறிப்பிடத்தக்க நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்கிறது.

இதன் மூலம் தனிநபர்களிடம் நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும் பல்வேறு தொடர்பாடல் முறைமைகளைத் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றை மேற்கொள்ள முடியும்.

இலக்கு குழுக்கள் மற்றும் அவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடத்தை சார் மாற்றத்தை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான செய்திகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் அடிக்கடி பார்வையிடுவதற்கும் செவிமடுப்பதற்கும் வழிவகுப்பதே தொடர்பாடலினூடாக நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்தும் முறைமையின் பிரதான நோக்கமாகும். (விசேடமான, அளவிடக்கூடிய, ஏற்புடைய, நிறைவேற்ற முடியுமான, காலத்துக்குப் பொருத்தமான ஒரு நோக்கமாக அமைதல் வேண்டும்)

•    விசேடமான: இலக்கு குழுக்கள் மற்றும் இலக்கு வைக்கும் நடத்தை யாது என்பது
•    அளவிடக்கூடிய: நடத்தை மாற்றத்தினை அளவிடக்கூடியதாயிருத்தல் ( எத்தனை சதவீதத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென்பது)
•    ஏற்புடைமை: தேவைக்குப் பொருத்தமானதாயமைதல் வேண்டும்.
•    நிறைவேற்ற முடியுமான: நிறைவேற்ற முடியுமானதாயிருத்தல் வேண்டும்
•   காலத்துக்குப் பொருத்தமான : குறிப்பிட்ட காலஎல்லையினுள் நிறைவேற்றக்கூடியதாயிருத்தல் வேண்டும்
தொடர்பாடலினூடாக நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அர்த்தமுள்ள அப் பணிக்காக மாத்திரம் தயாரிக்கப்பட்ட தொடர்பாடல் செயற்பாடுகளை இலக்கு குழுக்களிலிருந்து பொருத்தப்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்துதல் 

ஆரம்ப நோக்கங்களைக் கட்டியெழுப்பும் போது ஒவ்வொரு குழுவிற்குமாக உத்தேச செயற்பாட்டுக்கான விதந்துரைகளை கவனத்திற் கொள்தல் வேண்டும்.


• நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு எக் குழுவிலிருந்து நடத்தை சார் மாற்றம் எதிரபார்க்கப்படுகிறது?
• இலக்கு குழு யாது?
• மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் யாவை? நிறைவேற்ற முடியுமா? பயனுள்ளதா என்பன பற்றி.
• தற்போது அச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்களும் அது தொடர்பாகவுள்ள தடைகளும் பலமும்
• எவ் விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்துவது தொடர்பில் கூடுதலான பங்களிப்புச் செய்ய முடியும்?
• இச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான பொருட்கள்/ சேவை வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் கணப்படுகிறதா? இலகவில் பெற்றுக் கொள்ள முடுயுமா? இல்லையேல் என்ன செய்ய வேண்டும்?
<strongதற்போது டெங்கு ஒழிப்புக்காக பயன்பாட்டிலுள்ள நோக்கங்கள், இலக்கு குழுக்கள், மற்றும் பிரதான தொடர்பாடல் செய்திகள் கி்ழ் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்பாடல் நோக்கங்களும் இலக்கு குழுக்களும்
1.குடும்பத் தலைவிமார்களை இலக்காக கொண்டு வாரத்திற்கொரு முறை வீட்டையும் வளவையும் சுத்தப்படுத்துவதனூடாக சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவில் 80 – 90% அளவு வளவினை உள்ளடக்குதல்.


2.ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் பாடசாலையில் நுளம்புகள் பரவும் இடங்களை அகற்றுவதற்கு/ ஒழி்ப்பதற்கு அதிபர்களுக்கும் ஆசியர்களுக்கும் அறிவூட்டுவதன் மூலம் 80% - 90% மான பாடசாலைகளை நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல்.


3.அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் “டெங்கு ஒழிப்புக் குழுக்களை” நிறுவி வாரத்திற்கொரு முறை நுளம்புகள் பரவும் இடங்களை அகற்றுவதற்கு/ ஒழி்ப்பதற்கு நடவடிக்ைக மேற்கொள்ளல்


4.இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்படும் வேளைகளில் தகுதிவாய்ந்த ஒரு வைத்தியரிடம் சிகச்சை பெற்றுக்கொள்வதற்காக மக்களைத் தூண்டுதல்                                                                                                                                                                    

முக்கியமான செய்தி
1.ஒவ்வொரு ஞாயிறும் 30 நிமிடங்கள் தமது வீட்டிலும் சூழலிலும் நுளம்புகள் பரவும் இடங்களை கண்டறிந்து அகற்றவும்/ அழித்து விடவும்

2. ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் 30 நிமிடங்கள் உங்களது பாடவாலை வளவில் நுளம்புகள் பரவும் இடங்களைப் பரீட்சித்து அகற்றவும்/ அழித்து விடவும்

3. இரண்டு தினங்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்படும் போது தகுதிவாய்ந்த ஒரு வைத்தியரிடம் சிகச்சை பெற்றுக்கொள்ளவும்

4. காய்ச்சலைக் குணப்படுத்துவதற்காக பெரசிட்டமோல் மாத்திரையினை மட்டும் உரிய அளவில் உட்கொள்ளவும். ஏனைய மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

கட்டட நிர்மாண வளவுகளிலுள்ள நுளம்புகள் பரவும் இடங்களை அடிக்கடி பரீட்சிக்கவும்.

29
ஏப்2014

ஜனாதிபதி செயலணி அதிஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தாபிக்கப்பட்டதுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது தேசிய ரீதியில், மாகாண ரீதியில், மாவட்ட ரீதியில் மற்றும் பிரதேச ரீதியில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் பங்கேற்றலைப் பெற்றுக் கொள்ளலே அதன் நோக்கமாகும். இதன் முதலாவது கூட்டம் 1010 மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

உறுப்பினர்கள்

  • சுகாதார அமைச்சு
  • உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
  • அரசாங்க நிருவாக அமைச்சு
  • கல்வி அமைச்சு
  • பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
  • சுற்றாடல் அமைச்சு
  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • ஊடகத்துறை அமைச்சு

அமைச்சுக்களின் பொறுப்புக்களும் பணிப்பொறுப்புக்களும்

சுகாதார அமைச்சு
• டெங்கு நோய் தொடர்பாக சிகிச்சையளிக்கும் துறைகளை சக்தி பெறச் செய்வதன் மூலம் மரண விகிதாரத்தைக் குறைத்தல்.
• டெங்கு நோய் கொள்ளை நோய் நிலைமையாகப் பரவுவதைத் தடுத்தல்.
• ஏற்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புடன் டெங்கு ஒழிப்புக்காக/ தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளல். .


அரசாங்க நிருவாக அமைச்சு
• அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றை நுளம்புகள் பெருகாத விதத்தில் பேணிச் செல்லல்.
• அமைச்சின் கீழ் உள்ள மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்திலுள்ள கள உத்தியோகத்தர்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபடுத்தல்.

கல்வி அமைச்சு
• அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள், பயிற்சிக் கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள் ஆகியவற்றை நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல்.
• நுளம்புகள் பரவாத சுற்றாடலைப் பேணிச் செல்வதற்காக பாடசாலை மாணவர்களிடம் நடத்தைசார்ந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தல்.
• ஏற்புடைய சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பணிக்குழாத்தின் ஒருங்கிணைப்புடன் பாடசாலையினையும் சுற்றுச் சூழலையும் நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல்.
• பாடசாலை மாணவர்களினூடாக வீடுகளில் நுளம்புகள் பரவாதவாறு வீட்டை அண்மித்த சுற்றுச் சூழலை நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்வதற்கு அறிவுரை வழங்குதலும் வழிநடாத்தலும்.

சுற்றாடல் அமைச்சு
• திண்மக் கழிவுப் பொருட்களை உரியவாறு அகற்றுவதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரித்தலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்.
• டெங்கு ஒழிப்புக்குரிய முனைப்பான பங்களிப்பினை வழங்குதல்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
• இலகுவில் உக்கிப் போகாத பொருட்கள் உள்ள்ளிட்ட திண்மக் கழிவுப் பொருட்களை உரியவாறு அகற்றுதல்
• வடிகான் முறைமையினை சுத்திகரித்தல், சுத்தம் செய்தல் மற்றும் நீர் தேங்கி நிற்காதவாறு பராமரித்தல்.
• பொது இடங்களை நுளம்புகள் பரவாதவாறு பராமரித்தல்.
• டெங்கு ஒழிப்புக்காக முனைப்பான பங்களிப்பினை வழங்குதல்
• சட்ட ஏற்பாடுகளை வலுவடையச் செய்தல்.


பாதுகாப்பு அமைச்சு /சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
• அமைச்சின் கீழுள்ள அனைத்து முப்படைகளின் தலமையகங்கள், பொலிஸ் நிலையங்கள், விடுதிகள் மற்றும் ஏனைய அனைத்து வளவுகளையும் நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல்.
• டெங்கு நுளம்பு ஒழிப்புச் செயற்பாட்டுக்காக முனைப்பான பங்களிப்பினை வழங்குதல்

ஊடகத்துறை அமைச்சு
• டெங்கு நோய் அறிகுறி, சிகச்சை, டெங்கு நோய் ஒழிப்பு என்பன பற்றி சுகாதார அமைச்சின் தொழிநுட்ப ஆலோசனைக்கேற்ப அறிவத்தல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நிதி அறவீடுகள் ஏதுமின்றி விளம்பரப்படுத்தல்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
• டெங்கு நோய் கொள்ளை நோய் நிலைமையாக பரவிச் செல்கின்ற சந்தர்ப்பங்களில் அதனை ஓர் அனர்த்தமாகக் கருதி அக் கொள்ளை நோய் நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுத்தல்.

நுளம்பு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இலக்குகள்

  • பயனுள்ள ஒன்றிணைந்த காவி ஒழிப்புக்கான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்.
  • டெங்கு நோயின் தற்போதைய நிலைமை, காவி ஒழிப்பில் காணப்படுகின்ற நிலைமை, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் டெங்கு ஒழிப்புக்கான திட்டங்களைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல், அந் நடவடிக்கைகளின் முடிவு தொடர்பான மேற்பார்வையும் மீளாய்வும், தேவையான தொழிநுட்ப மற்றும் முகாமைத்துவ ஆற்றலை விருத்தி செய்தல்.
  • டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களின் போது மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக தரப்பினர்களிடையே ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய ரீதியாக ஏற்புடைய துறைகளுடனான ஒருங்கிணைப்பினை வலுவடையச் செய்தல்.
  • டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளின் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் என்பவற்றுக்கான தீர்வு வழங்கப்படும் போது தேவையான சந்தர்ப்பங்களில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளல்.
  • டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடைமுறையிலுள்ள கருத்திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றின் நிலைமையினை அடிக்கடி மதிப்பீட்டுக்குட்படுத்தி தேவையான திருத்தங்களை மேற்கொள’ளல்.
  • டெங்கு நோய் ஒரு கொள்ளை நோயாக பரவுகின்ற சந்தர்ப்பங்களில் செயற்படுவதற்கான அவசர அனர்த்த செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரித்தல் மற்றும் அத் திட்டத்தினை அமுல்படுத்தும் போது கிடைக்கின்ற அனுபவங்களைப் பயன்படுத்தி அதனை மேலும் விருத்தி செய்வதன் மூலம் அதன் செயற்றிறனை அதிகரித்தல்.
  • சுகாதாரத் துறை மற்றும் சுகாதாரத் துறையல்லாத துறை என்பவற்றின் கூட்டிணைப்புடன் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • தரப்பினர்களுக்கிடையிலான கூட்டிணைப்பினைக் கொண்ட மாகாணக் குழுக்கள், மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான குழுக்களை அமைத்தல் மற்றும் அவற்றின் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கூட்டிணைப்புச் செய்தல்.
  • மக்களது பங்களிப்புடன் தடையின்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூடுதலான கவனஞ் செலுத்துதல்.


அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு

  • 13/0495/027 ஆம் இலக்கமுடைய அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய சுகாதார அமைச்சின் செயலாளரது தலைமைப் பொறுப்பில் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள்/ மேலதிக செயலாளர்கள் ஆகியோரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. டெங்கு ஒழிப்புக்காக அனைத்து தரப்பினர்களையும் முனைப்புடன் பங்கேற்கச் செய்தல், இச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் மூன்று மாதத்திற்கொரு முறை அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்தல் ஆகியன இவ் உப குழு நியமிக்கப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களாகும்.
28
ஏப்2014

நோய்க்காவி முகாமைத்துவம் இரண்டு பிரதான பணிகளினூடாக இடம் பெறுகிறது. அதாவது
•    நோய்க்காவிக் கண்காணிப்பு     
•    நோய்க்காவிக் கட்டுப்பாடு    

  1. சுற்றாடலை முகாமை செய்தல்
  2. உயிர்க் கட்டுப்பாட்டு முறைமை  
  3. இரசாயனக் கட்டுப்பாட்டு முறைமை  
  4. ஒன்றிணைந்த நோய்க்காவிக் கட்டுப்பாட்டு முறைமை
  5. தரப்பினர்களுக்கிடையிலான கூட்டிணைப்பு, மக்கள் பங்களிப்பு) முறையாக நுளம்புகளின் அடர்த்தியினையும் பருவகாலத்தினையும் கணக்கிடலே நோய்க்காவித் கண்காணிப்பு எனப்படும்.         

நோய்க்காவிக் கண்காணிப்பின் மூலம்


(1).காலத்துடன் காவியின் அடர்த்தியின் மாற்றத்தினை அவதானிப்பதன் மூலம் நோய் பரவும் அவதானக் காலவீச்சினை முற்கூட்டியே இனங் காண்பதற்கும் அதன் மூலம் கொள்ளை நோய் நிலைமைகளைத் துரிதமாக கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.


(2).காவிக் கண்காணிப்பு மூலம் நோய்க்காவி பரவும் இடங்கள், நடத்தை முறைமை மற்றும் நோயைப் பரப்புவதற்காக ஒவ்வொரு நுளம்பு இனத்தினதும் பங்களிப்பினை ஆய்வு செய்ய முடியும். இத் தகவல்களைப் பயன்படுத்தி டெங்கு நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடு முழுவதும் மிகவும் பயனுள்ள விதத்தில் மேற்கொள்வதற்கான ஆற்றல் காணப்படுகிறது.


காவிக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது டெங்கு ஒழிப்பு அலகானது தேசிய ரீதியாக மலேரியா ஒழிப்பு அலகு, யானைக்கால் நோய் ஒழிப்பு அலகு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்கின்றது. தேசிய ரீதியாக செயற்படும் இந் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச மலேரியா உத்தியோகத்தர்கள், யானைக்கால் நோய் ஒழிப்பு அலகிற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் குடம்பி சம்பந்தமான நிபுணர்கள் ஆகியோரினால் காவிக் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல், அவதானித்தல் என்பன மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக குடம்பி நிபுணர் குழுக்கள் மாவட்ட மட்டத்திலும் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நோய்க்காவிக் கட்டுப்பாடு

நோய்க்காவிக் கட்டுப்பாட்டு செயற்பாடு சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இடம்பெறுவதுடன் இதற்காக பிரதேச மலேரியா உத்தியோகத்தர்கள், யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பிரதேச வைத்திய உத்தியோகத்தர்கள், குடம்பி நிபுணர்களும் அவர்களது குழுக்களும் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்ட அலுவலர்களுடன் கூட்டிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.


பிரதான செயற்பாடுகள்

  • மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் உத்தியோகத்தர்கள் தமது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான தொழிநுட்ப அறிவு, பயிற்சி, உபகரணம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் என்பன உள்ளிட்ட தேவையான ஏனைய அணைத்து வசதிகளையும் வழங்குதல்.
  • நோய்க்காவி முகாமைத்துவம் பற்றிய வழிகாட்டியைத் தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் ஏற்புடைய பணிக்குழாத்தினைப் பயிற்றுவித்தல்.
  • டெங்கு நோய்க்காவி ஒழிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி தொடர்பில் நுளம்பிடத்தில் எதிர்ப்புச் சக்தி காணப்படுகின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • மாவட்ட மட்ட செயற்பாடுகளை அடிக்கடி மேற்பார்வை செய்தலும் மீளாய்வு செய்தலும்.
  • • வாராந்தம் கிடைக்கப்பெறும் குடம்பி நிபுணத்துவத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நுளம்பு அடர்த்தி கூடிய பிரதேசங்கள் தொடர்பில் அபாய எச்சரிக்கையினை மேற்கொள்ளல்.      

 

நுவரெலியா மாவட்டத்தின் நோய்க்காவி கண்னாணிப்பு நடவடிக்கைகள் கண்டிப் பிரதேச மலேரியா உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்படும்.

பணிக்குழாத்தினைப் பயிற்றுவித்தல்

Dengue Vector Control

In Sri Lanka, Aedes aegypti and Ae. albopictus are responsible for transmission of dengue and Dengue Haemorrahgic fever. These mosquitoes use a wide range of confined larval habitats, both man-made and natural. Some man-made container habitats produce large numbers of adult mosquitoes, whereas others are less productive.
Current vector control measures used in Sri Lanka,

  • Environmental Management (Environmental modification, Environmental manipulation and changes to human habitation or behaviour)
  • Biological methods (Larval control)
  • Chemical methods (Larval control and Adult control)
  • Integrated vector management
  • Intersectoral coordination and social mobilization and
  • Enforcement of law against offenders 


Environmental Management
Environmental management is to change the environment to prevent or minimize vector breeding and/or man vector mosquito contact by destroying, altering, removing or recycling containers that produce larval habitats. Environmental management is the most efficient approach of dengue vector control and it is comprised of three components; i.e.  Environmental modification, Environmental manipulation and changes to human habitation or behavior.

Environmental Modification
Permanent or long lasting physical transformation of vector breeding sites in order to eliminate/ reduce vector larval habitats.
e.g. Provision of reliable water supply to the community in order to prevent water storage
Install a reliable water supply to the community and households would prevent or minimize water storage in cement tanks, barrels and other containers, thus, installation of a regular water supply would help a great deal to reduce dengue vector breeding in water storage containers and thereby reduce dengue transmission. 

Environmental Manipulation
Temporary changes to vector breeding habitats to prevent/ minimize vector breeding
e.g.
•    Frequent emptying and cleaning by scrubbing of water storage tanks, barrels and other containers, flower vases, refrigerator trays
    
•    Installation of mosquito proofing nets or tight lids to water storage tanks, barrels and other containers
Water storage containers can be fitted with tight lids or tightly fitted mosquito proof mesh to prevent entering of mosquitoes to lay eggs (oviposition) in these containers. Studies have shown that such measures prevent mosquito breeding in water storage tanks and barrels in Sri Lanka  

•    Cleaning of blocked roof gutters
Clogged roof gutters are important breeding site of Ae. aegypti. The owners of the premises are required to clean or install them with a suitable angle in order to prevent water collection.  If the owners are unable to maintain them satisfactorily, those gutters should be removed.
 
•    Sheltering stored tyres in order to prevent collection of rain water in tyres
•    Proper disposal or recycling of discarded containers including tyres
Non biodegradable items of household, community and industries should be collected and disposed regularly, preferably, once in 3 days.

Discourage growing plants that collect water in the leaf axils

Changes to human habitations or behaviour
Installing mosquito proof screens on windows, doors and other entry points
Use of mosquito nets while sleeping during day time

Biological Control
Biological control is based on the introduction of organisms that prey upon, parasitise, competes with or otherwise reduce vector species.


Organisms.
• The introduction of organisms that, parasitize, compete with or reduce populations of Aedes  mosquitoes
• Predators – can be deleted
Currently using biological agents for dengue vector control
Lavivarous fish:  Larvivorous fish can be applied for water storage tanks, barrels, cement lined wells and industrial tanks. Most efficient larvivorous fish for mosquito control are

  • Poecilia reticulata - Guppy
  • Aplochcheilus dayi – Nala handaya
  • Oryeochromis mossambicus / Oryeochromis niloticus- Thilapia spp
  • Rasbora daniconius - Dandi


• Microorganisms

  • Bacillus thurengiensis isralensis - Bti

Chemical methods for dengue vector control: Larvicides
Chemical larviciding should be considered as complementary to environmental management. Except in emergencies, chemical larviciding should be restricted to containers that cannot otherwise be eliminated or managed. Currently, temephos 1% sand granules at the rate of 1g/ 10 liter of water is used for larval control in water storage containers such as tanks and barrels.

Chemical methods for dengue vector control: adulticides
In Sri Lanka, space spraying (fogging) is widely used for dengue vector control. However, space spraying is recommended for vector control only in emergency situations to suppress ongoing epidemics or to prevent an incipient one. The objective of space spraying is the massive, rapid distruction of adult vector populations, both indoors and outdoors. In space spraying, a suitable insecticide is mixed with kerosene oil and released to the environment in the form of very tiny droplets. Once these droplets get contacted with the vector mosquitoes, the mosquitoes get knocked down and die. In order for the fog to reach the interior of the premises, the doors and windows should be kept open while fogging, however, food and water should be kept covered to prevent contamination with the insecticide.

Intersectoral collaboration and social mobilization
Aedes aegypti and A. albopictus breed in and around human habitations.In addition to the house holds, these mosquitoes are frequently find in schools, offices, private institutions, religious places, bus depots, tyre shops etc. Thus, involvement of other sectors such as education, security forces, religious leaders, water board, road authority etc are of utmost importance for dengue prevention and control. Involving the other sectors for dengue vector control facilitate a more coordinated approach than the individual and independent efforts of different sectors. This also provides a platform for partners to resolve cross agency issues and to share best practices while reducing duplication of efforts.

 

07
மார்2014

தேசிய டெங்கு தடுப்பு பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச கொள்ளை நோய் நிபுணத்துவ வைத்தியர்கள், மற்றும் கொள்ளை நோயியல் பிரிவு என்பவற்றின் பூரண ஒத்துழைப்புடன் டெங்கு நோய்க் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரதான செயற்பாடுகள்

  • நோய்கண்காணிப்பு பற்றிய தரவுகளை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளல். (தெரிவுசெய்யப்பட்ட 50 வைத்தியசாலைகளில்) (வரைபடம்)
  • இணையத்தளத்தினைப் பயன்படுத்துதல் தொடர்பாக ஏற்புடைய அலுவலர்களுக்குப் பயிற்சியளித்தல்.

தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள்

http://203.143.20.230/dengue.health.gov.lk/public_html/modules/mod_image_show_gk4/cache/Sentinel Hospitals1gk-is-187.pnglink
http://203.143.20.230/dengue.health.gov.lk/public_html/modules/mod_image_show_gk4/cache/Sentinel Hospitals4gk-is-187.pnglink
http://203.143.20.230/dengue.health.gov.lk/public_html/modules/mod_image_show_gk4/cache/Sentinel Hospitals3gk-is-187.pnglink
«
»

Province

District

Hospital

Western Province

             

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Colombo District      

 

 

 

 

 

IDH

BH Awissawella

LRH

NHSL

BH Homagama

TH Kalubowila

TH Sri Jayawardanapura

Gampaha District

   

 

 

BH Wathupitiwala

DGH Gampaha

DGH Negombo

TH Ragama

Kalutara District

  

 

BH Horana

DGH Kalutara

BH Panadura

Uva Province

  

 

Badulla Distirct

  

 

PGH Badulla

BH Diyathalawa

BH Mahiyanganaya

Southern Province

      

 

 

 

 

 

Galle District

  

 

BH Balapitiya

BH Elpitiya

TH Karapitiya

Hambantota District

 

DGH Hambantota

GH Tangalle

Matara Distict

 

BH Kamburupitiya

DGH Matara

Sabaragamuwa Province

    

 

 

Kegalle Distirict

  

 

BH Karawanalla

DGH Kegalle

BH Mawanalla

Rathnapura Disrict

 

BH Embilipitiya

PGH Rathnapura

Northern Province

  

 

Jaffna District

TH Jaffna

Mannar Distict

DGH Mannar

Vauniya Distirct

DGH Vavuniya

North Western Province

       

 

 

 

 

 

Kurunagala District

   

 

 

BH Dambadeniya

BH Kuliyapitiya

PGH Kurunagala

BH Marawila

Puttlum Distict

 

DGH Chilaw

BH Puttlum

Anuradhapura District

TH Anurhadapura

Polonnaruwa District

DGH Polonnaruwa

Eastern Province

      

 

 

 

Ampara District

  

 

DGH Ampara

BH Kalmunai

AMH Kalmunai

Batticoloa District

 

TH Batticoloa

BH Kalawanchkudy

Trincomalee District

 

BH Kanthalae

DGH Trincomalee

Central Province

     

 

 

 

 

 

 

 

 

 

 

Kandy District

   

 

 

BH Gampola

TH Kandy

DGH Nawalapitiya

TH Peradeniya

Matale Dsitrict

DGH Matale

Nuwara Eliya District

 

DGH Nuwara Eliya

 

எங்களை தொடர்பு

  • தேசிய டெங்கு தடுப்பு பிரிவு,
    பொதுமக்கள் சுகாதார கட்டடத்தொகுதி,
    555/5, எல்விட்டிகல மாவத்தை, நாராஹேன்பிட்டி, கொழும்பு 5
  • (0094) 1 2368416, 2368417

டெங்கு நோய்

டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக...

Read more